♥வீட்டிலும் வெளியிலுமாகப் பெண்கள் செய்கிற வேலைகளுக்கெல்லாம் ஊதியத்தை நிர்ணயித்தால், அது ஆண்களின் வருமானத்தை விஞ்சிவிடும். அந்த அச்சத்தால்தான் ஊதியமற்ற, அதிக உடலுழைப்புக் கோருகிற வேலைகளில் பெண்களை ஈடுபடுத்திவிட்டு ஆண்கள் காலாட்டியபடியே இருக்கிறார்கள்,
♥மாமதயானையை சிறுகுச்சியால் அடக்கிவிடுகிற பாகனைப் போல.இப்போது நிலைமை மாறிவிட்டது என்று சொல்கிறவர்கள், ‘இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க?’ என்று சொல்கிறவர்களுக்கு நிகரானவர்கள். தவிர, அங்கொன்றும் இங்கொன்றுமான விதிவிலக்குகளே புதிய விதிகள் ஆகிவிடாது.
♥அமர்ந்த இடத்திலேயே காபி, டீ கேட்கிறவர்களும், சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவுகிறவர்களும், தன் உள்ளாடைகளைக்கூடத் துவைத்துக் கொள்ளாதவர்களும், ‘வீட்ல அப்படி என்னதான் வேலை இருக்கோ’ என்று சலித்துக்கொள்கிறவர்களும், தட்டில் விழுகிற உணவுக்காகச் சிறு விரலைக்கூட அசைக்காத ஆண்களும் தங்கள் வீட்டுப் பெண்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்கிறவர்களே.
♥தோழிகளே, வீட்டு வேலைகள் அனைத்தும் ஏன் பெண்களின் தலையிலேயே சுமத்தப்படு கின்றன? ஊதியம் இல்லை என்பதாலேயே பெண்களின் உழைப்பு கணக்கில்கொள்ளப்படாமல் இருப்பதன் அடிப்படையை எப்படிச் சீரமைப்பது?
♥வீட்டு வேலைகள் அனைத்திலும் ஆண்களுக்கும் பங்கு இருப்பதை எப்படி நடைமுறைப்படுத்துவது? உங்கள் கருத்து என்ன, அனுபவம் என்ன? எழுதுங்கள்.... உங்கள் கருத்தை.
0 Comments
Thank you